இலங்கை வன்முறையால் தமிழகத்திற்கு ஆபத்து?.. கடலோர மாவட்டங்களில் காவல் படையினர் தீவிர ரோந்து பணி!

இலங்கையிலிருந்து தேச விரோத சக்திகள் தமிழகத்திற்குள் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கடலூர் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை வன்முறையால் தமிழகத்திற்கு ஆபத்து?.. கடலோர மாவட்டங்களில் காவல் படையினர் தீவிர ரோந்து பணி!

அண்டை நாடான இலங்கையில், ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இந்த வன்முறைக்கு இடையே அந்நாட்டின் 50க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் அண்மையில் தப்பியோடினர்.

இலங்கையிலிருந்து இத்தகைய கைதிகள் மற்றும் சமூக விரோதிகள் தமிழகத்துக்குள் ஊடுருவலாம் என  உள்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும்  தேச விரோத சக்திகள் ஊடுருவலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், கடலூரில் கடலோர காவல் படையினர் கடந்த ஒரு வாரமாக நடு கடலில் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  ஆழ்கடல்களில் நிற்கக் கூடிய கப்பல்களிலும் சோதனை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.