ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் அத்து மீறல்...புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் அத்து மீறல்...புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து திமுகவினர் அத்து மீறலில் ஈடுபடுவதாக எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளருக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

நாளையுடன் கட்சிகளின் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இதுவரை 688 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி,  இதுவரை 64 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும், 51 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 11 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை...!

முன்னதாகவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக ஆளும் கட்சி திமுக பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், வாக்காளர்களை அடைத்து வைத்து கொடுமை படுத்துவது உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகளை நிகழ்த்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து திமுகவினர் அத்து மீறலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி இடத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் திமுக தேர்தல் விதிமுறைகளை மீறி ஜனநாயக படுகொலை செய்து வருவதாகவும் ஈபிஎஸ் விமர்சனம் செய்தார்.