திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி- அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி- அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சியில் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி, பெண்கள், மாணவர்கள் முன்னேற்றம் மற்றும் விவசாயிகளுக்கு தோழனாக இருக்கக்கூடிய பல திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் நமது முதல்வர் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. என்.சேகரன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.