வீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கிய திமுக பிரமுகர்...

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கியதாக, தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் சுவர் ஏறி குதித்தவர்களை தட்டிக்கேட்ட துணை நடிகையை தாக்கிய திமுக பிரமுகர்...

சென்னை வளசரவாக்கம் அருகே ராதா அவென்யூ பகுதியை சேர்ந்த பாண்டி லட்சுமி, ஒரு குப்பையின் கதை படத்தில் கதாநாயகனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு படங்கள் மற்றும் நாடகங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இந்நிலையில், துணை நடிகை வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது சிலர் ஏறியுள்ளனர். அதனை கண்ட பாண்டி லட்சுமி மற்றும் அவரது மகன், சுவர் ஏறி குதித்தவர்களை தட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு, மாறி-மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

தி.மு.க. பிரமுகரின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து தம்மையும் தமது மகனையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாண்டி லட்சுமி புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். துணை நடிகையை தி.மு.க. பிரமுகர் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.