தமிழகத்தில் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்க சபதம் எடுக்க வேண்டும் - ஸ்டாலின்  

தமிழ்நாட்டில் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்க,திமுக தொண்டர்கள் சபதம் எடுத்து செயல்பட வேண்டுமென அக்கட்சித் தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்க சபதம் எடுக்க வேண்டும் - ஸ்டாலின்   

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்த நாள் மற்றும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழாவாக திமுக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் இன்று இந்த ஆண்டின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  திமுக பொதுச்செயலாளார் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், டிஆர் பாலு, கே.என் நேரு, ஐ. பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முரசொலி செல்வம் எழுதிய, முரசொலி சில நினைவலைகள் என்ற புத்தகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் பெரியார் விருதை பி.மதிவாணனுக்கும், அண்ணா விருதை தேனி எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருதை கும்மிடிப்பூண்டி கி. வேணுவுக்கும் வழங்கினார். இதேபோல் பாவேந்தர் விருது .வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது  பா.மு.முபாரக் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முக ஸ்டாலின், திமுக தொண்டர்களின் உழைப்பால் திமுக மீண்டும் ஆட்சியமைத்துள்ளதாகத் தெரிவித்தார்.  திமுக தமிழகத்தில் நிரந்தரமாக இனி ஆட்சியில் இருக்க வேண்டும் என திமுக தொண்டர்கள் சபதம் எடுத்து செயல்பட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.