திமுக என்பது கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம்...இபிஎஸ்.!!

Key கொடுக்கும் பொம்மை தலையாட்டுவதை போல ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக என்பது கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம்...இபிஎஸ்.!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், ராம்நகரில்  மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் கூறுகையில், 

525 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக, அறிவிப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் கேள்வி கேட்கும் மக்களிடம் பதிலளிக்க திராணியில்லாததால் காணொளி வாயிலாக பிரசாரம் நடத்துகிறார் என்றார். 

மேலும் தமிழக முதலமைச்சர் யாரோ எழுதி கொடுப்பதை பேசி வருகிறார் என கூறிய அவர், Key கொடுத்தால் தலையாட்டும் பொம்மை போல ஸ்டாலின் இருந்து வருகிறார் என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக என்பது கட்சியல்ல, அது கார்ப்பரேட் கம்பெனி ஒரு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்வது போல பணம் உள்ளவர்கள் பதவிகளை பெற்று வருகின்றனர் என்றும் திமுகவில் உழைப்பவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.