பாஜக வழியில் திமுக? நாராயணனின் சர்ச்சை டிவிட்

பாஜக வழியில் திமுக? நாராயணனின் சர்ச்சை டிவிட்

பாஜகவின் முடிவின் படியே ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றி என பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், தொற்றின் தீவிரம் குறிப்பிட்ட மாவட்டங்களில் குறைந்தாலும், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே தமிழகத்தில் நடைபெறாமல் இருக்கும் ப்ளஸ் டு தேர்வை, மாணவர்களின் நலன் கருதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக நேற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். மேலும், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும் குழு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் குறித்து முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் முடிவான ப்ளஸ் டூ தேர்வை ரத்து செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக செய்திதொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ’வக்கற்ற அடிமை தமிழக அரசு மத்திய பாஜக அரசு வழியில் +2 தேர்வை ரத்து செய்து விட்டது’என்ற திமுக அறிக்கை வந்திருக்கும் அதிமுக அரசு தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால். கூட்டணி கட்சிகள் எதிர்த்த போதும், பாஜகவின் வழியில் உறுதியான முடிவை எடுத்த முதல்வருக்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.