அதிமுகவுடனான பாஜக கூட்டணி மாசற்றது - அண்ணாமலை பேட்டி!

அதிமுகவுடனான பாஜக கூட்டணி மாசற்றது - அண்ணாமலை பேட்டி!

அதிமுகவுடனான பாஜக கூட்டணி மாசற்றது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மூத்த கட்சி என்று கூறியவர், இந்த கூட்டணியில் உள்ள  கட்சிகளுக்கு வெவ்வேறு பார்வைகள் இருக்கும் என்றும் அவற்றை வெளிப்படுத்துவது அவர்களின் கடமை என்றும் கூறினார்.

இதையும் படிக்க : கே.என்.நேரு - திருச்சி சிவா மோதல்: திமுக நிர்வாகிகள் 4 பேர் இடைநீக்கம்...!

அதே நேரத்தில்  திமுக கூட்டணி கட்சிகளைப் போல் அனைத்திற்கும் சம்மதம் தெரிவிக்கும் கட்சிகள் இந்த கூட்டணியில் இல்லை என்று விமர்சித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊடகங்கள் மற்றும் திரைப்படத் துறையை திமுக கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவுடனான பாஜக கூட்டணி மாசற்றது என்று கூறினார்.