திமுக தேர்தல்..! யார் எங்கு போட்டியிடுகிறார்கள்?

திமுக தேர்தல்..! யார் எங்கு போட்டியிடுகிறார்கள்?

திமுகவில் மாவட்ட செயலாளர், அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

திமுக தேர்தல்:

திமுகவின்  நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ள 72 மாவட்டங்களில் அவைத் தலைவர், மாவட்ட செயலாளர், 3  துணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட  தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்,  பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புக்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கி வருகிற  25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

வேட்புமனு தாக்கல்:

இந்தநிலையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்தின்றனர்.  சென்னை அறிவாலயத்தில் வேட்பாளர்கள் நேரில் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க: போர், பழிவாங்குதல்..! மோடியின் கருத்துக்கு குவியும் உலக தலைவர்களின் ஆதரவு..! 

நாளை யாருக்கு?

நாளை நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், 24ம் தேதி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் போட்டியிடும் உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். 

அமைச்சர்கள்:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் கீதா ஜீவனும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,  உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.