நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துகிறது...சி.வி.சண்முகம்.!!

நீட் தேர்வு குறித்து நேரிடையாக விவாதிக்க தயாரா என சவால் விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் குறித்து நேரடி சவாலில் ஏன் பேச தயங்குகிறார் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக நாடகம் நடத்துகிறது...சி.வி.சண்முகம்.!!

விழுப்புரத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர்,

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின்  தேர்தலில் வாக்குறுதிகள் எத்தனை கொடுத்தோம் என்று அவருக்கே மறந்துவிட்டதாகவும், எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நகரமன்ற தேர்தலுக்கு பிறகு தான் முழுமையான ஆட்டம் திமுக  இருக்க போவதாகவும், திமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து ரவுடிசம் எல்லாம் 8 மாதத்திலேயே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தை ஆளத்தெரியாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்புகள் தரமற்றதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் திமுக நாட்டு மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொண்டு இருப்பதாகவும், நீட் தேர்வில் திமுக நாடகம் நடத்துவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மேலும் திமுகவின் கைபாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.