நீட்-க்கு அனுமதியில்லை என தேர்தலில் வாக்குறுதி கொடுத்ததால் திமுக நாடகம்!! கரு.நாகராஜன் விமர்சனம்

தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்கா நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது என தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

நீட்-க்கு அனுமதியில்லை என தேர்தலில் வாக்குறுதி கொடுத்ததால் திமுக நாடகம்!! கரு.நாகராஜன் விமர்சனம்

தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்கா நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது என தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைபாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம் குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கு விசாரணைக்கு பின் சென்னை உயர்நீதமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நீட் தேர்வு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவாக உள்ளபோதும் 7 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீட் தேர்வினால் எந்த பாதிப்பும் இல்லை என தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டபோதும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் எதன் அடிப்படையில் இந்த குழுவை ஏற்றார் என கேள்வி எழுப்பினார்.

85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக ஏ.கே.ராஜன் தலைமையிரான குழுவினர் கூறுகிறார்கள் ஒரே கணிணியில் இருந்தும் 1000 த்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அனுப்ப முடியும் எனவும் உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதை போல் படம் எடுத்து அதை செய்தியாக வெளியிடுகிறார்கள் உண்மையில் இது திமுக குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்கா நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என குறிப்பிட்ட கரு.நாகராஜன்  இனியும் ஏழை மாணவர்வளின் மருத்துவ கனவில் விளையாடக்கூடாது எனவும் நீட் தேர்வுக்கு பிறகு 405 ஏழை மாணவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் நீட் தேர்வில் சமூக நீதி காக்கப்படுகிறது நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.