திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்... ஆலோசனை வழங்குகிறார் கனிமொழி கருணாநிதி !!!

திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்... ஆலோசனை வழங்குகிறார் கனிமொழி கருணாநிதி !!!

திமுக மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.  திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில் திமுக மகளிர் தொண்டர் அணி, மகளிர் சமூக வலைதளம் மற்றும் மகளிர் ஆலோசனை குழு நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணிக்கு புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள்,போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் மகளிர் அணி நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க:   அனைவரும் இந்துக்கள்...! சலசலப்பை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்தின் பேச்சு..!