நாளை மறுதினம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சபையில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

நாளை மறுதினம் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 5ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குகிறது. ஆளுநர் உரை முடிந்ததும் அலுவல் ஆய்வுக்குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்யும். 

கூட்டத்தொடரின் முதல்நாளான நாளை மறுதினம் மாலை 6 மணியளவில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், சபையில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்து எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 5-ந் தேதி மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.