திமுக!!! விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல் பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்குங்க பாஜக அறிக்கை

வேண்டும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன், தேங்காயையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், இன்று கவன ஈர்ப்புப் போராட்டம்

திமுக!!!   விவசாயிகள் வயிற்றில்  அடிக்காமல்  பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்குங்க பாஜக அறிக்கை

மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் தேங்காய்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. 

தென்னையில் இருந்து கிடைக்கும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. அவற்றை மீட்கவும், தமிழகத்தில் 11 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ஆதரிக்கவும், நியாய விலைக் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், சத்துணவில் தேங்காய் பால் போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள்  இந்த கவனிப்பு தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும், தேங்காய்க்கு சரியான விலை இல்லை என்று, தென்னை விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தமிழக அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடையில் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர்.  ஆனால், இவை எதையும் கண்டுகொள்ளாமல், விவசாயிகள் வயிற்றில் அடிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

மேலும் படிக்க | நான் மத வாதத்துக்கு தான் எதிரி” கோயில்கள் திருப்பணிக்கு நிதி கொடுத்தபின் முதலமைச்சர் பேச்சு

கடந்த 2016 ஆம் ஆண்டு, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது,  வெளி நாட்டிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு முழுமையாக தேங்காய் எண்ணெயை நம் மாநில மக்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக, சத்துணவுத் திட்டத்திலும், பொது விநியோகத்திலும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் அறிக்கை விட்டதை மறந்துவிட்டு, தான் ஆட்சிக்கு வந்ததும், தென்னை விவசாயிகள் நலன் குறித்து சிறிதும் அக்கறையின்றி இருக்கிறார். 

திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில், தேர்தல் வாக்குறுதி எண் 65 மற்றும் 66ல், தென்னையில் இருந்து மகளிர் குழுக்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் மூலமாகக் கிடைக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை, தமிழக அரசுக் கூட்டுறவு நிறுவனங்களே கொள்முதல் செய்யும் என்றும், கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியிருந்ததை மறந்து, தென்னை விவசாயிகள் போராட்டத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறது.

உடனடியாக, திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். தமிழகத்தில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, தென்னை விவசாயம் செழிக்க,  பொங்கல் தொகுப்பில், தேங்காயும் சேர்த்து வழங்குவதோடு , தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளான, தேங்காய் கொள்முதல் விலை, கொப்பரைத் தேங்காய் விலை ஆகியவற்றை உயர்த்தி அரசே கொள்முதல் செய்ய வேண்டும். 

பாமாயில் விநியோகத்தை குறைத்து, தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளின் சத்துணவுத் திட்டத்திற்கும் ரேசன் கடைகளில் பொது விநியோகத்திற்கும் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்