பெட்ரோல், டீசலை தொடர்ந்து சிலிண்டர் விலையும் உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டரும், வர்த்தக சிலிண்டரும் 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசலை தொடர்ந்து சிலிண்டர் விலையும் உயர்வு!

சமையல் எரிவாயு சிலிண்டரும், வர்த்தக சிலிண்டரும் 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரித்து ரூ.850.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.