வங்கக் கடலில் உருவானது ”மிதிலி” புயல்...!

வடமேற்கு வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று புயலாக மாறியுள்ளது.  இந்த புயலுக்கு "மிதிலி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்றும், மோங்கா, கொபுரா  இடையே கரையை கடக்கும் போது மணிக்கு 60 லிருந்து 80 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க : மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது...!

புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி  நாகை , கடலூர்  தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகத்திலும 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.