சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் - வைகோ கண்டனம்!

சுங்கச் சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் - வைகோ கண்டனம்!

சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில், தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிர்வாகம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்ட  செங்குறிச்சி, பெரம்பலூர், திருமாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் திடீரென ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க: முடிவுக்கு வந்த வேலை நிறுத்தப் போராட்டம்...முதலமைச்சர் பேசியது என்ன?

வைகோ அறிக்கை:

அந்த அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்ட  செங்குறிச்சி, பெரம்பலூர், திருமாந்துறை ஆகிய சுங்கச் சாவடி மையங்களில், திடீரென 58 ஊழியர்களை நிர்வாகத்தினர் பணி நீக்கம் செய்துள்ளனர். ஆனால் அதற்கான நடைமுறைகளோ, விதிகளோ கடைபிடிக்கப்படவில்லை எனவும்,  இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தலையிட வேண்டும்:

எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.