கலாச்சாரம் என்பது நம் வாழ்வியல்; அது மதம் அல்ல - முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு

முதலில் அனைவரும் தாய்மொழில் பேச வேண்டும் அடுத்து சகோதர மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் - முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

கலாச்சாரம் என்பது நம் வாழ்வியல்; அது மதம் அல்ல - முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் பேச்சு

வெங்கடேஷ்வரராவ் நூற்றாண்டு விழா

சென்னை ஆர்.கே சாலையில் உள்ள  மியூசிக் அகாடமியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறை, கலா பிரதக்ஷனி மற்றும் கண்டசாலா குடும்பம் இணைந்து நடத்திய இசை மேதை கண்டசாலா வெங்கடேஷ்வரராவ் 100ஆம் ஆண்டு விழா மற்றும் கலா பிரதக்ஷனி கண்டசாலா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலா பிரதக்ஷனி கண்டசாலா விருதினை பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, டிரம்ஸ் சிவமணி, தோட்டா தரணி,  ரஞ்சனி ரமணி, தயாபன், வயலின் கலைஞர் அவசரலா கன்னியாகுமரி, சுதாராணி ரகுபதி ஆகியோருக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.

வெங்கையா நாயுடு பேச்சு

பின்னர் மேடையில் பேசிய வெங்கையா நாயுடு இந்தியா முழுவதும் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் தனது வாழ்நாளில் மறக்க முடியாத கலை நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று. இதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கண்டசாலா பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், பல மொழியில் திறம் பெற்றவர், அவரது குரல் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்ப கூடிய ஒன்று என கூறினார்.

கண்டசாலா 100 ஆண்டு விழாவை மிக பெரிய அளவில் கொண்டு செல்ல மத்திய சுற்றுலா துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன் எனவும் தினசரி காலையில் 4. 30 மணிக்கு எழுந்து, சில விஷயங்களை எழுதுவேன், பின்னர் கண்டசாலா பாடலை ஒவ்வொரு நாளும் கேட்பேன் என்றார் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு.

தாய்மொழியில் பேசுங்கள்

கலாச்சாரம் என்பது ஒரு வாழ்வியல் அது மதம் அல்ல. உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் இருக்க எதற்காக வெளிநாட்டு மொழியை தேடி செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு, முதலில் அனைவரும் தாய்மொழில் பேச வேண்டும் அடுத்து சகோதர மொழியை கற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | மதுரை கிளையில் முதல் பெண் ”சோப்தார்" நியமனம்...!

இந்தியாவில் மிகவும் பழமையான தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகள் இருக்க  வெளிநாட்டு மொழி எதற்கு முதலில் அனைவரும் தாய் மொழியில் பேசுங்கள் பின்னர் பிறருக்கு புரியவில்லை என்றால் அதற்கு உரிய மொழியில் பேசுங்கள் என்றார்