"கலாச்சார அடிப்படையில் நமக்கு ஒற்றுமை உள்ளது" கவர்னர் ஆர்.என்.ரவி...!!

"கலாச்சார அடிப்படையில் நமக்கு ஒற்றுமை உள்ளது" கவர்னர் ஆர்.என்.ரவி...!!

"கலாச்சார அடிப்படையில் நமக்கு ஒற்றுமை உள்ளது" கவர்னர் ஆர்.என்.ரவி 

அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் உள்ளதாகவும் கலாச்சார அடிப்படையில் நமக்கு ஒற்றுமை உள்ளது எனவும் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

சிக்கிம் மாநிலம் உருவான தின விழா கொண்டாட்டம் இன்று ராஜ் பவனில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட சிக்கிம் மாநிலத்தினர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி, "1975ல் சிக்கிம் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இணைந்தது. பல ஆண்டுகளாகவே இந்திய பண்பாட்டின் ஒரு பகுதியாக சிக்கிம் இருந்தது. மேற்கு சிக்கிமில் மகாதேவ் கோவில் மற்றும் பழைய விநாயகர் கோவில்களின் இன்றும் உள்ளது. புத்த மத தத்துவம் நாளாந்தாவில் உருவாகியது. பாரத நாட்டின் நாகரிகத்தில் இவை பிறந்தது. பிரிட்டிஷ் அரசு சிக்கிம் இந்தியாவில் ஒரு பகுதி என்பதை ஏற்கவில்லை" என தெரிவித்தார்.

மேலும் பூரி, ராமேஸ்வரம், துவாரகா பற்றி தனது முன்னோர்கள் கூறியதை நினைவு கூர்ந்த அவர் தனது 7 வயதில் புனித தலங்களுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக கலாச்சார ஒன்றினைவு என்பது இந்தியர்களுக்கு இயல்பிலேயே இருப்பதாக தெரிவித்த அவர் பிரிட்டிஷ் வருகைக்குப் பிறகு அதை மாற முயற்சிக்கப் பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் நிறைய இடங்களில் உள்ளவர்களுடன் கலாச்சார ஒருங்கிணைப்பில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்திய அவர், விழாக்களும், கொண்டாட்டங்களும் நம்மை இணைபதாகவும் அரசியல் அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் உள்ளதாகவும்  கலாச்சார அடிப்படையில் நமக்கு ஒற்றுமை உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து அனைத்து மாநில விழாக்களையும் கொண்டாட பிரதமர் உத்திரவிட்டுள்ளார் என ஆளுநர் தெரிவித்தார்.

இதையும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!