கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் போதிய அளவில் இல்லை....ஆளுநர் ஆர்.என்.ரவி...!

கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் போதிய அளவில் இல்லை. கலாச்சாரத்திற்கும் நல்ல எண்ணிக்கையில் கல்விக்கூடங்கள் இருக்க இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் போதிய அளவில் இல்லை....ஆளுநர் ஆர்.என்.ரவி...!

தமிழ் கலாச்சார அகாடமி சார்பில் மெகா இசை விழாவின் 5வது பகுதி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர்,

தமிழ் கலாச்சார அகாடமி வாழும் கலைகளை காப்பாற்றுகிறது என்றும் வேறுபட்ட மக்களை கண்டுபிடிப்பது கலாச்சாரம் தான் என்றார்.

நமது ஆன்மீகம் எப்படி எல்லையற்றதோ அதே போல் நம் கலாச்சாரமும் எல்லையற்றது. தற்சார்புடைய இந்தியாவை உருவாக்க  சுயமதிப்பும் அவசியம் அது நம் கலாச்சாரம் சார்ந்து இருக்குமாயின் அது தான் தற்சார்புடைய இந்தியா என கூறினார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருப்பதை பாரதம் என்கிறோம். நடனம் என்பது பார்வைக்கு மட்டுமல்ல் அது கலாச்சாரம் சார்ந்தது. நம் கலாச்சாரம் ஆன்மீகம் சார்ந்தது என்றார்.

மக்களை வேறுபடுத்துவது கலாச்சாரம் தான் அதில் நமது இந்திய கலாச்சாரம் மிகவும் தனித்துவமானது முக்கியமாக மேற்கத்திய கலாச்சாரத்தை விட வேறுபட்டது என கூறிய அவர். கலாச்சாரம் சார்ந்த கல்விக்கூடங்கள் போதிய அளவில் இல்லை என்றும் அறிவியல் விஞ்ஞானத்திற்கு இருப்பது போல் கலாச்சாரத்திற்கும் நல்ல எண்ணிக்கையில் கல்விக்கூடங்கள் இருக்க இந்திய அரசு முன்னெடுக்க வேண்டும் என கூறினார்.