பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை... இன்று வழங்குகிறார் முதலமைச்சர்...
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி மூலம் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து, மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். சட்டசபை தேர்தலின் போது, கொடுத்த வாக்குறுதிகளையும் அவ்வப்போது நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை இன்று வழங்க உள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் காணொலி நிகழ்ச்சிகளில், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டடம் மற்றும் மீன் வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதேபோல், ஓசூரில் கால்நடைப் பண்ணை நாட்டினகோழி பெருக்க வளாகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களையும் திறந்து வைக்க உள்ளார்.