"பயிர் காப்பீடு".. 9.26 லட்சம் விவசாயிகள் பயன் - பட்ஜெட்டில் பன்னீர்செல்வம் அறிவித்த முழு விவரம் இதோ!!

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு 2 ஆயிரத்து 55 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

"பயிர் காப்பீடு".. 9.26 லட்சம் விவசாயிகள் பயன் - பட்ஜெட்டில் பன்னீர்செல்வம் அறிவித்த முழு விவரம் இதோ!!

இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் பாதிப்படைவதை தடுக்க பயிர் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

2020-2021-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9.26 லட்சம் விவசாயிகளுக்கு 2 ஆயிரத்து 55 கோடி ரூபாய் இழப்பீடாக  வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வேளாண் அமைச்சர், 60 ஆயிரம் விவசாயிகளுக்கு தார்பாய்கள் 5 கோடி ரூபாய் மானியத்தில் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியமாக நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்காக 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் இந்தாண்டு துவங்கப்படும், இதற்கு 70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும்,  நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.

தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு  மையம் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வேளாண் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.