உழவனின் நண்பன்...ஜல்லிக்கட்டுக்கு சொந்தகாரன்...வீரத்திற்கு உரித்தான மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

உழவர்களின் நண்பனாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக இன்று மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும்  கொண்டாடப்படுகிறது.

உழவனின் நண்பன்...ஜல்லிக்கட்டுக்கு சொந்தகாரன்...வீரத்திற்கு உரித்தான மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று சூரியன், மற்றும் விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு விவசாயிகள் நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த விழா கிராமப்புறங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தங்களுக்காக ஆண்டு முழுவதும் உழைத்த கால்நடைகளை சிறப்பிக்கும் வகையில் அவைகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வர்ணம் தீட்டி அழகுபடுத்தி மஞ்சள், குங்குமம் வைத்து, கரும்பு, பொங்கல் கொடுத்து வணங்குகின்றனர்.

இந்நாளில் மாடுகளை வண்டியில் பூட்டாமல் கோவிலுக்கு அழைத்து சென்று பிரார்த்தனை செய்வர். அதேபோல் பல்வேறு கிராமங்களில் உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டும் நடத்தப்படுகிறது.