விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க தடை - நீதிமன்றம்

விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க தடை - நீதிமன்றம்

திருச்சி அருகே விவசாய நிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டெல்லியில் திமுக கொடி : 2024 தேர்தலில் 40க்கு 40 வெற்றி - பிறந்தநாள் விழாவில் லியோனி பேச்சு

மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிறுவனம்

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்தை சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவில், விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் தங்கள் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லும் பிரதான சாலையில், விவசாய நிலத்தில் புதிதாக மதுபான கடையை திறக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மனுவில் அச்சம் 

விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடையை திறந்தால், காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விவசாய நிலத்தில் கொட்டப்பட வாய்ப்புள்ளதால், அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதித்து, விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது

புதிய டாஸ்மாக் மதுபான கடை அமைய இருக்கும் இடம் அருகே அரசு பள்ளி மற்றும் கோயில் உள்ளதால், மாணவர்கள் மற்றும் பக்தர்கள் இயல்பாக செல்ல இயலாத சூழல் ஏற்படும் என தெரிவித்துள்ளார். கோவில் மற்றும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என வலியுறுத்தி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  படிக்க | திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய சிறை நன்னடத்தை அதிகாரி - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

மதுபான கடையை அமைக்க கூடாது

எனவே விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விவசாய நிலத்தில் மதுபான கடைகள் அமைக்க கூடாது என விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால், மனுதாரர் குறிப்பிடும் இடத்தில் மதுபான கடையை அமைக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடிந்து வைத்தனர்.