வளர்ப்பு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்திய தம்பதி

வீட்டில் வளர்த்த பூனைகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய தம்பதி

வளர்ப்பு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்திய தம்பதி

கோவை மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர், தாங்கள் வளர்த்த செல்ல பிராணிகளான பூனைகளுக்கு வளைகாப்பு விழா நடத்தியுள்ளனர்.

வேலாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்-சுபா தம்பதியினர், ஜீரா மற்றும் ஐரிஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ள ப்ரிஸியன் வகை பூனைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்ப்பமான பூனைகளுக்கு ஆர்.எஸ். புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் செல்லப்பிராணி நிலையத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது.

இதில் பூனைகளுக்கு கறுப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவித்து தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், பூனைகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சாக்லெட் ஆகியவை வழங்கப்பட்டன.