தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு....

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு....

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஐக்கிய அரபு அமீரகம், ஜார்ஜியா, குவைத்தில் இருந்து வந்த 3 பேர் உள்பட 10 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை, சிவகங்கை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தமிழ்நாடு மீது அக்கறை இல்லாத ஆளுநர்..... தேநீர் விருந்து புறக்கணிப்பு!!!