தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி… மக்கள் ஆர்வம் குறைவா?    

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிபடியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி… மக்கள் ஆர்வம் குறைவா?      

தமிழகத்திற்கு 6,93,970 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளது. அதனை அனைத்து மாவட்டத்திற்கும் தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.  குறிப்பாக சென்னைக்கு மட்டும் 53,470 டோஸ்  கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, பூந்தமல்லி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 1,09,470 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 1,02,000 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகளும், சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு 83,000 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகளும்...மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, விருதுநகர், சிவகாசி ஆகிய மாவட்டங்களுக்கு 70,000 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகளும் திருச்சி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு 66,500 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, வேலூர், திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 55,000 டோஸ் தடுப்பூசிகளும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 60,000 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசி என மொத்தமாக வந்த 6,93,970 டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசியையும் 45 மாவட்டங்களுக்கு தேவைக்கேற்றவாறு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது.