தமிழகத்தில் இன்று புதிதாக 1,893 பேருக்கு கொரோனா உறுதி...

தமிழகத்தில் இன்று புதிதாக 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று புதிதாக 1,893 பேருக்கு கொரோனா உறுதி...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 893 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 363 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆயிரத்து 930 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   

மேலும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 367ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.