தமிழகத்தில் 6 ஆயிரமாக குறைந்த கொரோனா தொற்று... 135 பேர் உயிரிழப்பு...

தமிழகத்தில் மேலும் புதிதாக ஆறாயிரத்து 162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 ஆயிரமாக குறைந்த கொரோனா தொற்று... 135 பேர் உயிரிழப்பு...
தமிழகத்தில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டின் நேற்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அதில், ஆறாயிரத்து 162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து நேற்று மட்டும் ஒன்பதாயிரத்து 46 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 23 லட்சத்து 67 ஆயிரத்து 831 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
கொரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனையில் 49 ஆயிரத்து 845 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 155 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 31 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 756 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.