வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில்  9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று...

சென்னை மிக பிரபலமான உயிரியல் பூங்காவில் மான், குரங்கு, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு இருந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

உயிரியல் பூங்காவில் அவை நெருக்கமாக வசிப்பதால் அவற்றுக்கிடையே கொரோனா பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இதற்குமுன் தெலங்கானா, ஐதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.