வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ...அமைச்சர் மா.சுப்பிரமணியன்....!

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ,அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது மரபணு ஆய்வுக்கு பின்னரே அறியப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ...அமைச்சர் மா.சுப்பிரமணியன்....!

சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்

அப்போது பேசிய அவர் ,தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தமிழகத்தில்அனைத்து விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் லண்டனில் இருந்து நேற்று சென்னை வந்த 8 நபர்களை பரிசோதித்ததில் அதில் 2 நபர்களுக்கும் மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஒரு நபருக்கும் என மொத்தமாக மூன்று நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவர்களுக்கு ஒமிக்ரான் உள்ளதா என்பதை மரபணு பரிசோதனை முடிவுகள் வந்த பின் அறியப்படும் என்றும் இன்னும் 5 நாட்களில் முடிவுகள் தெரியப்படும் என கூறிய அவர், மேலும் 8 நபர்களும் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறினார்.

மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில்  அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஹை ரிக்ஸ் நாடுகளில் இருந்து வந்த 2928 பேரும், non high risk நாடுகளில் 10,736 பேரும் 3 நாட்களில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியுள்ளது என்றும் 3 பேரும் தற்போது நலமுடன் உள்ளதாகவும் கூறினார்

நாளை 13 ஆவது மெகா தடுப்பூசி நடைபெற உள்ளது. உலக நாடுகளில் ஓமிக்ரான் அச்சம் நிலவி வரும் நிலையில் பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தடுப்பூசியை முழுமையாக செலுத்திட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கிங்ஸ் மருத்துவமனையில் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் ,நேற்றய நாள் வரை 1868 நபர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறினார்

அதேபோல் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொன்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது  ஆனால் அவர்களுக்கு உயிராபத்து  ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்ற நிலை வரக்கூடாது என்பதற்காகவே அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மேலும் ஒரு வருடத்திற்கு முக கவசம் அணிய வேண்டும் கேட்டுக்கொண்டார்.