தமிழகத்தில் புதிதாக 1,218 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
தமிழகத்தில் புதிதாக 1,218 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 218 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 87 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் ஒருநாள் பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 132 பேரும், செங்கல்பட்டில் 88 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரேநாளில் ஆயிரத்து 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், மொத்த உயிரிழப்பு 35 ஆயிரத்து 899ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு 14 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com