மீன் பிடி டெண்டர் விடுவதில் வாக்குவாதம்...2வது முறையாக ஒத்திவைப்பு ...

மீன் பிடி டெண்டர் விடுவதில் வாக்குவாதம்...2வது முறையாக ஒத்திவைப்பு ...

எடப்பாடி ஒன்றியம் வெள்ளரி வெள்ளி ஏரியில் மீன் பிடி குத்தகைக்கு டெண்டர் விடுவதில் திமுக, அதிமுக பிரமுகர்கள் வாக்குவாதம்....! 2வது முறையாக டெண்டர் ஒத்திவைப்பு ...
Published on

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் வெள்ளரிவெள்ளி ஏரியில் மீன்பிடிக்கும் உரிமைக்கு ஓராண்டுக்கான டெண்டர் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சியினருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. 

அதேபோல் இரண்டாவது முறையாக இன்று டெண்டர் விடுவதில் சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை ஒன்றிய ஆணையாளர் ரவிச்சந்திரன் அறிவிப்பு பலகையில் வெளியிட்டார். இதனால் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com