கூடுதல் தளர்வு? நாளை முதல்வருடன் ஆலோசனை! விக்ரமராஜா பேட்டி

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வருடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படும் என  வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

கூடுதல் தளர்வு? நாளை முதல்வருடன் ஆலோசனை! விக்ரமராஜா பேட்டி

கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வருடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளப்படும் என  வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்த பிறகு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாக வணிகர்கள் நல வாரியத்தில் ஜி.எஸ் டி கவுன்சில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் மட்டுமே உறுப்பினராக உள்ளனர்.

அந்த விதியை திருத்தி சமான்ய வணிகர்களும் உறுப்பினர் ஆகலாம் எனும் விதியை கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம் என்றார். சேலத்தில் காவல் துறையால் தாக்கப்பட்ட இறந்த வணிகருக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கிய நிலையில் அதை 50 லட்சமாக வழங்க கோரிக்கை வைத்தோம் எனவும், உதவி ஆய்வாளர் பெரிய சாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றார். மேலும் நாளை இது தொடர்பாக ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்தாகவும் கூறினார்.