நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் - அதிகாரிகள் நாளை ஆலோசனை!

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் தலைமையில் நாளை சென்னையில் ஆலோனை கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை ஜி எஸ் டி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நாளைய தினம்  சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க : கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு...! 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

இதில் வரும் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.