குக்கர் சின்னத்தை கையில் எடுத்த காங்கிரஸ்..! கூட்டணி மாறியதால் குழப்பத்தில் வாக்காளர்கள்

திமுகவுடம் கூட்டணியில் செயல்படும் காங்கிரஸ் கட்சி தென்காசியில் மட்டும் தனித்தும் அமமுகவுடன் இணைந்தும் களம் காணும் நோக்கத்தை கண்டு தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குக்கர் சின்னத்தை கையில் எடுத்த காங்கிரஸ்..! கூட்டணி மாறியதால் குழப்பத்தில் வாக்காளர்கள்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுகவுடம் கூட்டணியில் செயல்படும் காங்கிரஸ் தென்காசியில் மட்டும் தனித்தும் அமமுகவுடன் இணைந்தும் களம் காணும் நோக்கம்... தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடாரின் இந்த முடிவு, அப்பகுதியில் திமுக மற்றும் காங்கிரஸினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி தெற்கு மாவட்டம், சுரண்டை பேரூராட்சியில் 27 வார்டுகளில் 26ல் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. அதே போல் திமுகவும் தனித்து போட்டியிடுகிறது. 

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. சிவகிரி பேரூராட்சியில் அமமுகவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து 15 வார்டுகளில் போட்டியிடுகிறது. 

3 வார்டுகளை தவிர அனைத்து வார்டுகளிலும் இரண்டு கட்சிகளும் களத்தில் உள்ளது. காங்கிரஸ், அமமுக இரண்டு கட்சி வேட்பாளர்களும் கட்சி தலைமையின் படங்களை அச்சிட்டு வீடு வீடாக துண்டு பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 

காங்கிரஸ் அமமுக கூட்டணி சிவகிரி பேரூராட்சியிலும், சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் தனித்தும், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் நகராட்சிகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்தும், அக்கட்சியினரே போட்டியில் உள்ளதாலும் கூட்டணி எது என தெரியாமல் வாக்களர்கள் குழம்பியுள்ளனர்.