காங்கிரஸ் பிரமுகா் கொலை; 6 பேருக்கு ஆயுள்!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்த வழக்கில்,  6 பேருக்கு  ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், வழக்கறிஞராகவும், காங்கிரஸ் கட்சி பிரமுகரும் இருந்தவர் மாடக்குடி சேகர். இவருக்கு லதா என்ற மனைவியும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மாடக்குடி சேகர் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த கூலிப்படையை சேர்ந்த மூன்று பேர், சேகரை சாரமரியாக அறிவாளால் வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே மாடக்குடி சேகர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது இருந்த திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

ஒரு வருடத்திற்கு பின்பு மாடக்குடி சேகரின் வழக்கில் ஆச்சிகுமார், இளையராஜா, ஜான்சன் குமார்,  இருங்களூர் நாட்டாமை நடராஜ், சங்ககிரி சரவணன், கனகராஜ், துப்பாக்கி மனோகர், ஜெஸ்ட் செந்தில் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கில் வாதம் நடைபெற்று முடிந்த நிலையில்,
கடந்த 20ம் தேதி மாடகுடிசேகர் கொலை குற்றவாளிகளுக்கு இரண்டாவது கூடுதல் திருச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி  ஜெயக்குமார் தீர்ப்பளிப்பார் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் இன்று 25ஆம் தேதி நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார், வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இளையராஜா, திருச்சி திமுக மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வரும் ஜான்சன் குமார், உள்ளிட்ட ஆறு பேருக்கு தலா ஒருஆயுள் தண்டனையும், 2000 அப்ராதமும் விதித்து 
 
இந்தவழக்கில் தொடர்புடைய இளையராஜா பல்வேறு கொலை, நில அபகரிப்பு என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.  அதேபோன்று ஜான்சன் குமார் திருச்சி திமுக மத்திய மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். மேலும் ஜான்சன் குமார் மீது லால்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 207 முறை பத்திரப்பதிவு செய்த குற்றச்சாட்டு உள்ளது.

இவ்வழக்கின் முதல் குற்றவாளியான ஆச்சிகுமார் (எ) குமார் என்பவர் வழக்கு நடந்து கொண்டிருந்த போதே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளியான 6 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!