தஞ்சையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு ஒலித்த சங்கு !!

தஞ்சை மாநகரில் போரில் ஒலித்த சங்கை 42 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒலிக்க வைத்த மாநகராட்சி.

தஞ்சையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு ஒலித்த சங்கு !!

தஞ்சை ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் தற்போது உள்ள இடத்தில் போர் சங்கு அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அதாவது 1939 முதல் 1945ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சை நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும் .

இந்த விளக்குகள் அமைப்பதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்திற்காக தஞ்சையில் போர் சங்கு நிறுவப்பட்டது. முற்றிலும் இரும்பு துணிகளை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சாரம் உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சை நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது. ஆனால் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. இதனால் பராமரிப்பு இன்றி கிடந்தது. 

இந்த சங்க மீண்டும் இயக்கப்பட்டு மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து  சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டு. அதன்படி இரும்பு தூண் மீது பொருத்தப்பட்டு இருந்த  100 கிலோ வரை எடை கொண்ட சங்கு சரி செய்யக்கூடிய பணி நடைபெற்று மீண்டும் சுதந்திர தினம் முதல் இருந்த அதே இடத்தில் புதிய சங்கு நிறுவப்பட்டு நேற்று முதல் ஒலிக்கத் தொடங்கியது. 

மேலும் தஞ்சை மாவட்டத்தில் கரந்தை புதிய பேருந்து நிலையம் நீதிமன்ற சாலை ஈபி அலுவலகம் அருகே என ஆறு இடங்களில் சங்கு நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சங்கானது காலை, மதியம், மாலை என மூன்று நேரங்களிலம் ஆகிய நேரங்களில் ஒலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.