1 முதல் 10-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயம் - தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!!

1 முதல் 10-ம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாயம் - தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!!

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டை பாடத் திட்டமாக அறிவிக்கக் கோரி கிருஷ்ணா பாண்டே என்பவர் தாக்கல் செய்து மனு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

அதில், அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி பாடத்துக்காக விளையாட்டு படிப்பில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற தகுதியான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் உடற்கல்வியை பாடமாக படித்துள்ளதால், 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி பாடம் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.