படிக்க ஆசை...ஆனா பணம் இல்லை...மனமுடைந்த மாணவி தற்கொலை!

திருநெல்வேலி அருகே மேல் படிப்பிற்கு பணம் இல்லாததால் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க ஆசை...ஆனா பணம் இல்லை...மனமுடைந்த மாணவி தற்கொலை!

கல்லிடைக்குறிச்சியை அடுத்த மூலச்சி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகள் இந்திராணி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது மயக்கமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் இந்திராணியை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் விஷம் அருந்தி இருந்தது தெரிய வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் விசாரித்ததில், இந்திராணி கல்லூரி முடிந்து மேல்படிப்பு படிக்க விரும்பியதாகவும், அதற்கு பணம் இல்லாததால் பெற்றோர் மறுத்த நிலையில், விரக்தி அடைந்து விஷம் அருந்தியதும் தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.