அமராவதி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவன்... சுழலில் சிக்கி பலியான பரிதாபம்...

நண்பனின் பிறந்த நாளை கொண்டாட திருப்பூரில் இருந்து தாராபுரம் வந்த கல்லூரி மாணவன் அமராவதி ஆற்றில் மூழ்கி பரிதாப பலி.

அமராவதி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவன்... சுழலில் சிக்கி பலியான பரிதாபம்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழி சாலை அமராவதி ஆற்றில் இன்று மாலை நண்பனின் பிறந்த நாளை நண்பனுடன் இணைந்து கொண்டாட வந்திருந்த கோவை சூலூர் (ஆர்.வி.ஸ்)பாலிடெக்னிக் மாணவன் அமராவதி ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்பவர் முத்துச்சாமி இவரது மகன் ஆதி (எ) ஆதித்யா ராம் (17), சூலூர் (ஆர்.வி.எஸ்) தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் ஆதி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயத்தில் உள்ள நண்பன் சூர்யாவை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து விட்டு, பின்னர் வாருங்கள் நாம் அனைவரும் தாராபுரத்தில் அமராவதி ஆற்று தண்ணீரில் குளித்துவிட்டு செல்லலாம் என முடிவு செய்து, நண்பர்களுடன் தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றில்  ஓடுகிற தண்ணீரைப் பார்த்து அனைவரும்  அதில் குளிக்க ஆசைப்பட்டு உடன் வந்த தனது நண்பன் செல்வகுமாருடன் அமராவதி ஆற்றில் இறங்கி குளித்தார்.

அப்போது ஆதி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார். தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையின் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் எட்டு வீரர்களுடன் சுமார் 2 மணி நேரம் ஆற்றுநீரில் தேடி மாணவன் ஆதியின்  உடலை கண்டுபிடித்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆற்றில் மூழ்கி இறந்த மாணவன் குறித்து தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஆதியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. மாணவன் உயிரிழந்த தகவலறிந்த அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.