10 மாதங்களில் 5100 யூனிட் ரத்தம் சேகரிப்பு... ரத்த கொடையாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு...

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 மாதங்களில் 5100 யூனிட் ரத்தம் சேகரித்ததையடுத்து ரத்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

10 மாதங்களில் 5100 யூனிட் ரத்தம் சேகரிப்பு... ரத்த கொடையாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு...

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்படும் ரத்த வங்கி மூலம் தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு முகாம் அமைத்து தன்னார்வளர்கள் உதவியுடன் ரத்தம் சேகரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தேனி மாவட்டத்தில் 43 முகாம்கள் அமைக்கப்பட்டு அரிய ரத்த வகை உள்பட 5 ஆயிரத்து 109 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தத்தின் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுமார் 7 ஆயிரம் நோயாளிக்கு ரத்தம் வழங்கப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரையில் ரத்தம் பற்றாக்குறையால் மரணங்கள் நிகழ்ந்தது இல்லை என்றும், ரத்த வங்கியில் அனைத்து குரூப் ரத்தங்களும் போதுமான அளவில் இருப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டது. 

மருத்துவக்கல்லூரி மருத்துமவனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட கலெக்டர் முரளீதரன் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட ரத்த கொடையாளர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் மெடல் அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.