கோவை: மின்கசிவால் உயிரிழந்த தாய், மகள்.. சோகத்தில் உறவினர்கள்..!

வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் அலறிய மகளை காப்பாற்ற சென்ற தாயும் பலி..!

கோவை: மின்கசிவால் உயிரிழந்த தாய்,  மகள்.. சோகத்தில் உறவினர்கள்..!

அழகிய குடும்பம்:

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியில் வசித்துவரும் ஆனந்த் என்பவர் திருச்சி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் அவரது மனைவி கார்த்திகா மற்றும் மகள் அர்ச்சனா ஆகியோர் வசித்து வந்தனர். 

மின்கசிவில் சிக்கி தாய், மகள் உயிரிழப்பு:

தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த அர்ச்சனா, காலையில் எழுந்தவுடன் குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அர்ச்சனா சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து மகளை காப்பாற்ற அங்கு சென்ற அவரது தாயார் கார்த்திகாவும் மின் கசிவில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

தாய், மகள் சடலமாக மீட்பு:

அர்ச்சனாவை அழைத்துச் செல்ல வந்த வாகன ஓட்டி செல்போன் மூலம் அழைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் செல்போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது, குளியல் அறையில் இருவரும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. 

அப்பகுதியில் சோகம்:

உடனடியாக மின்சாரத்தை துண்டித்த பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த துடியலூர் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாய் மற்றும் மகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது