" சட்டங்களை ஈஷா மதிக்கவில்லை.." - கோவை எம்.பி. நடராஜன்

" சட்டங்களை ஈஷா மதிக்கவில்லை.." - கோவை எம்.பி. நடராஜன்

கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்காக வந்த பெண் சுபஸ்ரீ அங்கிருந்து வெளியேறி சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. கடந்த மாதம் 11 ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த சுபஸ்ரீயை 18 ஆம் தேதி காண அவரது கணவர் வந்தபோது சுபஸ்ரீ ஈஷாவில் இருந்து மாயமானது தெரியவந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுபஸ்ரீ சாலையோரம் ஓடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து பழனிக்குமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சுபஸ்ரீயை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இருப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பழனிகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த பழனிக்குமார் சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும், இதுகுறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்காக வந்த பெண் சுபஸ்ரீ சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஐ.டி. யு உள்ளிட்ட இயக்கங்கள் பங்கேற்றன. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், யோகா பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ  டிசம்பர் 18 ஆ ம் தேதியில் இருந்து காணவில்லை என்றும், சிசிடிவி காட்சிகளில்  யோகா உடையோடு இருட்டுபள்ளம் பகுதியில் ஓடுவது பதிவாகி இருப்பதாக கூறியவர், யாருக்கு பயந்து அவர் ஒடினார் என்றும், ஒரு வார காலத்தில் அந்த மையத்தில் நடந்தது என்ன எனவும் கேள்வி எழுப்பினார். அவரது உடல் உடனடியாக உடற்கூறு ஆய்வு செய்து , அவர்களின் குடும்ப வழக்கத்திற்கு மாறாக எரியயூட்டப்பட்டு இருப்பதாகவும், இது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதுடன், அந்த பெண்ணை துரத்தியது யார், அவர்  ஓட வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தெல்லாம் தமிழக காவல் துறை  தனியாக விசாரணை நடத்த விசாரணைக்குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பா.ஜ.க தலைவர் நட்டா உட்பட தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் தலைவர்கள் வந்து செல்வதால் தங்களை யாரும் கேட்க முடியாது என்பதை போல, இந்திய நாட்டின் சட்டங்களை மதிக்காமல் ஈஷா செயல்படுவதாகவும், கோவை காவல் துறைக்கு  ஈஷா மையம் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டினார்.
 
இதையும் படிக்க : தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் டி.டி.எப்... இப்போ புது கேஸ்..? கடந்து வந்த பாதை என்ன ...?