கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது..! காரணம் என்ன?

கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது..! காரணம் என்ன?

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி காவல்நிலையம் அழைத்து வரப்பட்டதை கண்டித்து காவல் நிலையம் முன்பு குவிந்த பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வீடியோ ஆதாரம்:

கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் குறித்து இழிவாக பேசியதாக தெரிகிறது. 

புகார்:

மேலும், ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வீடியோ ஆதாரத்துடன் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  

மேலும் படிக்க: ஆ.ராசாவை குறிவைத்த பாஜக… பின்வாங்கிய ஆ. ராசா

கைது:

இந்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதையறிந்த பாஜக தொண்டர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். 

பரபரப்பு:

தொடர்ந்து, மருத்துவ பரிசோதனைக்காக பாலாஜி உத்தமராமசாமியை போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர்....