பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பேரணி! சாலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்!!

பட்டுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலையில் தேங்காய்களை உடைத்து, தென்னை விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் பேரணி! சாலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டம்!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், தென்னை விவசாயிகள் சார்பில் மாபெரும் தேங்காய் உடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தபோராட்டத்தில், மத்திய மாநில அரசுகள், தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,

ரேசன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடைபெற்றது.

இதில் கையில் பதாகைகளுடன் ஏராளமானோர், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் முடிவில், பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் முன்பாக சாலையில் தேங்காயை உடைத்து, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.