தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !!

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

தமிழகத்தில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு !!

தமிழகம் முழுவதும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இத்தேர்வை, 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 பேர் எழுதினர். கடந்த 20ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. 

தேர்வு முடிவுகளை www.tnresults. nic.in, www.dge1.tn. nic.in, www.dge2.tn. nic.in போன்ற இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும், பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பப்பதிவில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.