10ம் வகுப்பு பொதுத்தேர்வு... ஹால் டிக்கெட் பதிவிறக்கம்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு... ஹால் டிக்கெட் பதிவிறக்கம்!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்கள் வருகிற 27 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி, 20ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வருகிற 27 ஆம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் திருத்தங்கள் இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளரை அணுகி திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.  

இதையும் படிக்க:  எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள்.... முதலமைச்சர் அறிவுரை!!