வாணியம்பாடி ம.ஜ.க. நிர்வாகி படுகொலை... நகர காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாணியம்பாடி ம.ஜ.க. நிர்வாகி படுகொலை... நகர காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்...

வாணியம்பாடியில், ம. ஜ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில்,  கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆய்வில், ஜீவா நகர் பகுதியில், டீல் இம்தியாஸ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன், 8 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால்,  தலைமறைவாக இருந்த, டீல் இம்தியாஸ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், வாணியம்பாடி ம. ஜ.க. நிர்வாகி படுகொலை சம்பவம் நடைபெற்றது. டீல் இம்தியாஸ் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்யாததால், இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் சரக டி.ஐ, ஜி பாபு நடவடிக்கை  மேற்கொண்டுள்ளார்.