ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா - நடிகர் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதாவில் நடிகர் ரஜினியின் நிலைப்பாடு என்ன? என்று நடிகர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா -  நடிகர் ரஜினியின் நிலைப்பாடு என்ன?

ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதாவில் நடிகர் ரஜினியின் நிலைப்பாடு என்ன? என்று நடிகர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பெயரில் அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் தங்கர் பச்சான் புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா ஆபத்தானது என்றும், இது தொழிலை அழிக்க கூடிய வேலை என்று கடுமையாக விமர்சித்தார். மேலும் ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக திரைத் துறையினர் ஒன்று சேர்ந்து ஓரணியாக எதிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.